ரஷியாவில் இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லை: இந்திய தூதரகம் தகவல்

ரஷியாவில் உள்ள இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லை என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Update: 2022-03-12 10:28 GMT
கோப்புப்படம்
மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திவருவதால், ரஷியா மீது உலகநாடுகள் தடை விதித்துவருவகிறது. இதனால், அங்கு படிக்கும் இந்திய மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. 

இந்த நிலையில், ரஷியாவில் உள்ள இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லை என்றும், அவர்கள் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் ரஷியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ரஷியாவில் உள்ள இந்திய மாணவர்களுக்கான வழிகாட்டுதலில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லாததால், அவர்கள் தங்கள் படிப்பை தொடரலாம் என்றும், வங்கிகள் முடக்கப்பட்டுள்ள காரணத்தினால், மாணவர்கள் தங்கள் நாட்டிற்கு செல்ல விரும்பினால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழகங்களில் ஆன்லைன்  வகுப்புகள் எடுப்பதற்கு இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளதால், மாணவர்கள் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களை தொடர்புகொண்டு தங்கள் படிப்பினை தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்