உக்ரைனுக்கு மேலும் 1 கோடி யுவான் மனிதாபிமான உதவிகள் வழங்கும் சீனா..!

சீனா மேலும் 1 கோடி யுவான் மதிப்பில் உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க உள்ளது.

Update: 2022-03-21 15:55 GMT
image courtesy: AFP
பீஜிங், 

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வரும் விவகாரத்தில் ரஷியாவின் நெருங்கிய நட்பு நாடான சீனா நடுநிலை நிலைப்பாட்டை கொண்டு உள்ளது. மேலும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண இருதரப்பையும் சீனா வலியுறுத்தி வருகிறது.

மேலும் ஏற்கெனவே, மனிதாபிமான அடிப்படையில், உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் உள்பட 50 லட்சம் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 கோடி) மதிப்பிலான நிவாரண பொருட்கள் உக்ரைனுக்கு வழங்குவதாக சீனா அறிவித்தது.

இந்த நிலையில் தற்போது, சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம் உக்ரைனுக்கு கூடுதலாக 1 கோடி யுவான் (இந்திய மதிப்பில் சுமார் 12 கோடி) மனிதாபிமான உதவியை வழங்கும் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்