சீனாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.0 ஆக பதிவு

சீனாவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டரில் 6.0 ஆக பதிவாகி உள்ளது.

Update: 2022-03-26 09:07 GMT

பீஜிங்,



சீனாவின் குயிங்காய் மாகாணத்தில் தெலிங்கா நகரில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 6.0 ஆக பதிவாகி உள்ளது.  இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்து உள்ளது.

எனினும், மக்கள் நெருக்கம் குறைவான பகுதியிலேயே நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  நிலநடுக்க மையத்தில் இருந்து 20 கி.மீ. வரை எந்த கிராமங்களும் இல்லை என தெலிங்கா நகர அவசரகால மேலாண்மை வாரியம் தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கம் தெலிங்கா நகரம் மற்றும் ஜியூகுவான், ஜியாயுகுவான் மற்றும் ஜாங்கியே ஆகிய நகரங்களில் உள்ள குடியிருப்புவாசிகளால் உணரப்பட்டு உள்ளது.  நிலநடுக்கத்தினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

இதனால், அந்த பகுதியில் இயக்கப்படும் பல்வேறு ரெயில்கள் காலதாமதமுடன் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று சீன ரெயில்வேயின் குயிங்காய்-திபெத் குழும நிறுவனத்தின் ஜைனிங் ரெயில் நிலையம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்