ரஷிய நாடாளுமன்ற டி.வி. சேனல் முடக்கம்..!! யூடியூப் நிறுவனம் அதிரடி

ரஷிய நாடாளுமன்ற டி.வி. சேனல் முடக்கம் செய்து யூடியூப் நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2022-04-10 01:48 GMT
கோப்புப்படம்
வாஷிங்டன், 

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வரும் விவகாரத்தில், உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகியவை ரஷியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில், யூடியூப் நிறுவனம் ரஷியாவின் அரசு டி.வி. சேனல்கள் அனைத்தயைும் ஏற்கனவே முடக்கியுள்ளது.

இந்த நிலையில், ரஷிய நாடாளுமன்ற கீழவையின் நிகழ்வுகளை ஒளிபரப்பும் டுமா என்கிற டி.வி. சேனலை யூடியூப் நிறுவனம் முடக்கியுள்ளது. தங்கள் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறியதற்காக டி.வி. சேனல் முடக்கப்பட்டதாக யூடியூப் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்