ஐஸ்லாந்து பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு

ஐஸ்லாந்து பிரதமரை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.;

Update:2022-05-04 15:52 IST
Image Courtesy: AFP
கொபென்ஹஜென்,

இந்திய பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாளான நேற்று முன் தினம் பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார். ஜெர்மனி பிரதமர் ஒலிப் ஸ்கோல்சை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார். 

இதனை தொடர்ந்து பயணத்தின் 2-வது நாளான நேற்று பிரதமர் மோடி டென்மார்க் சென்றார். அங்கு அவர் டென்மார்க் பிரதமர் பிரதமர் மிட்டீ ஃபெடிக்செனை சந்தித்து பேசினார்.

இந்நிலையில், பயணத்தின் 3-வது நாளான இன்று பிரதமர் மோடி பிரான்ஸ் செல்கிறார். முன்னதாக டென்மார்க்கில் பிரதமர் மோடி ஐஸ்லாந்து பிரதமர் கத்தரீன் ஜக்கோப்ஸ்டோட்ரியை சந்தித்தார். டென்மார்க் தலைநகர் கொபென்ஹஜெனில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது, புவியின் உள்வெப்பத்தில் இருந்து மின்சாரம் தயாரிப்பதில் சிறந்து விளங்கும் ஐஸ்லாந்துடன் இந்தியா இணைந்து செயல்படுதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.

மேலும் செய்திகள்