உலகின் சிறந்த உணவுக்கலை நிபுணர்கள் பட்டியலில் இடம் பிடித்த 4 இந்தியர்கள்

உலகின் சிறந்த உணவுக்கலை நிபுணர்கள் பட்டியலில் 4 இந்தியர்கள் இடம் பிடித்தனர்.

Update: 2022-06-25 17:00 GMT

உலகளவில் உணவு, பானங்கள் துறையில் 50 பேர் தங்களது புதுமையான கண்டுபிடிப்புகளால் ஆட்டத்தின் போக்கையே மாற்றுவார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் பில்பாவ் நகரில் நடந்த நிகழ்ச்சியில் எதிர்காலத்தில் உலகளவில் கொடி கட்டிப்பறந்து, ஆட்டத்தின் போக்கையே மாற்றுபவர்கள் என 50 பேர் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

இந்த பட்டியலில் டெல்லியின் தடய அறிவியல் துறை விஞ்ஞானி டாக்டர் ரிஷா ஜாஸ்மின் நாதன், பெங்களூருவின் வினேஷ் ஜானி, அனுஷா மூர்த்தி, முமபை நிதி பந்த் ஆகிய 4 இந்தியர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இவர்களோடு 5-வது நபராக சிங்கப்பூரில் பிறந்த இந்திய வம்சாவளி திரவேந்தர் சிங்கும் இடம் பிடித்திருக்கிறார். உலகின் 6 கண்டங்களில் இருந்து 400 பேர் போட்டியிட்ட நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பேர் பட்டியலில் இவர்கள் இடம் பிடித்திருப்பது சிறப்பு. இவர்கள் உணவு கலையில் புதுமையான கண்டுபிடிப்பாளர்கள் ஆவார்கள். இதுபற்றி ரிஷா ஜாஸ்மின் நாதன் கூறும்போது, "2020-ம் ஆண்டு நியூசிலாந்தில், நான் முடித்துள்ள ஆராய்ச்சி, உணவு மற்றும் காய்கறி தோல்களை பயன்படுத்தி, குடிநீரில் இருந்து கன உலோகங்களை பிரித்தெடுப்பது பற்றியதாகும். பாதுகாப்பான ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குவதற்கு, நச்சுயியல் அறிவியலை பயன்படுத்துவதுதான் எனது நோக்கம் ஆகும்" என தெரிவித்தார். இப்படி ஒவ்வொருவரும் தமக்கே உரித்தான வகையில் ஆற்றலாளர்களாக உள்ளனர். இந்த டாக்டர் ரிஷா ஜாஸ்மின் நாதன், இங்கிலாந்தில் உள்ள ஆங்கிலியா ருஸ்கின் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் ஆக உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்