துருக்கியில் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் 5 பேர் கைது

5 பேரிடமும் மேல்விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-07-14 22:35 GMT

அங்காரா,

துருக்கி அரசாங்கம் கடந்த 2013-ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பினை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. அவர்கள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல் என அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். எனவே அவர்களை ஒடுக்க ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்தவகையில் டிரோன்கள் மூலம் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை ராணுவத்தினர் கண்காணித்து வந்தனர். இதில் துருக்கியின் தென் பகுதியில் உள்ள மெர்சின் மாகாணத்தில் சந்தேகப்படும்படி சிலர் நடமாடுவது தெரிய வந்தது.

இதனையடுத்து 5 பேரை ராணுவத்தினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அந்த 5 பேரிடமும் மேல்விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்