மொராக்கோ: திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 37 பேர் பலி

மொராக்கோவில் அடுத்த 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வானிலை மையம் எச்சரித்து உள்ளது.;

Update:2025-12-16 02:07 IST

ரபத்,

மொராக்கோ நாடு கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த சூழலில், வெள்ளம் போன்ற பருவநிலை மாற்ற தாக்கங்களாலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

அந்நாட்டின் தலைநகர் ரபத் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளம் எதிரொலியாக, நகரின் பல பகுதிகளிலும் நீர் சூழ்ந்து காணப்படுகிறது. கார்கள் சாரை சாரையாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்சிகளும் காணப்படுகின்றன.

இந்த வெள்ளத்தில் சிக்கி 37 பேர் பலியாகி உள்ளனர். 7 பேர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் 2 பேர் ஐ.சி.யு.வில் உள்ளனர். 3 நாட்களுக்கு பள்ளிகள் அடைக்கப்பட்டு உள்ளன. அடுத்த 3 நாட்களுக்கு சபி உள்பட பல்வேறு பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய கூடும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

எங்களுடைய குழந்தைகளின் பாட புத்தகங்கள் என எல்லாவற்றையும் இழந்து விட்டோம். வெள்ள நீர் அடித்து சென்று விட்டது. இரவில் படுத்து தூங்க முடியவில்லை என 6 குழந்தைகளின் தாயான ஹனானே நஸ்ரதீன் வேதனை தெரிவித்து உள்ளார். வெள்ளத்தில், வீடுகள், கடைகள், உடைமைகள், பொருட்கள் என பல பொருட்களை மக்கள் இழந்து தவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்