டுவிட்டரில் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை! டுவிட்டர் இயக்குநர்கள் குழு கலைப்பு - எலான் மஸ்க் அறிவிப்பு

டுவிட்டர் இயக்குநர் குழுவில் தற்போது தான் மட்டுமே இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.;

Update:2022-11-01 08:46 IST

கலிபோர்னியா,

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரையும் அவர் கடந்த வாரம் தன் வசப்படுத்தினார்.

எலான் மஸ்க் டுவிட்ட உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போது டுவிட்டர் இயக்குநர் குழுவை அதன் உரிமையாளரான எலான் மஸ்க் அதிரடியாக நீக்கியுள்ளார்.

டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உள்ள 9 பேரையும் ஒரே அறிவிப்பில் நீக்கி அவர் அதிரடி காட்டியுள்ளார். டுவிட்டர் இயக்குநர் குழுவில் தற்போது தான் மட்டுமே இருப்பதாகவும், டுவிட்டரின் தலைமை செயல் அதிகாரியாக தான் இருப்பதாகவும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

முன்னதாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளை அவர் நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்