குரேஷியா: கடற்பரப்பின் மீது கட்டப்பட்ட பிரம்மாண்ட பாலம் திறப்பு

குரேஷியாவில் சீனாவின் உதவியுடன் கடற்பரப்பின் மீது கட்டப்பட்ட பிரம்மாண்டமான பாலம் திறந்து வைக்கப்பட்டது.

Update: 2022-07-28 17:44 GMT

குரேஷியா,

குரோஷிய வரலாற்றில் மிகப்பெரிய தருணங்களில் ஒன்றாகப் போற்றப்படுகின்ற நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தெற்கு கடலோரப் பகுதிகளை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் பிரம்மாண்டமான பாலம் திறந்து வைக்கப்பட்டது.

குரேஷியா நாட்டில் கோமர்னா என்ற பகுதியில் கடற்பரப்பின் மீது இரண்டரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சீனா அரசின் உதவியுடன் அந்நாட்டு தொழில்நுட்பத்துடன் 2018 ஆம் ஆண்டு பிரம்மாண்டமான பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின.

கொரோனா காலத்தில் தடைபட்ட பணிகள், தற்போது நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிய பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. கோலாகலமாக நடைபெற்ற பாலத்தின் திறப்பு விழாவில், கலைநிகழ்ச்சிகளும் வண்ணமயமான வாணவேடிக்கையும் நடைபெற்றது. நாள் முழுவதும் கொண்டாட்டங்கள் நடந்தன, 250 ஓட்டப்பந்தய வீரர்கள் பாலத்தை கடந்தனர். குரோஷிய கொடிகளுடன் சிறிய படகுகள் ஆறு தூண்களுக்கு கீழே பயணம் மேற்கொண்டு மகிழ்ந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்