மாடியில் இருந்து கீழே விழுந்து டிக்டாக் பெண் பிரபலம் பலி

கீழே விழுந்ததால் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

Update: 2024-05-26 23:57 GMT

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள புஜேராவில் வசித்து வந்தவர் ஷனிபா பாபு (வயது 30). கேரளாவை சேர்ந்த இவர், டிக்டாக் பிரபலம் ஆவார். புஜேராவில் உள்ள 19- மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் கணவர் சனுஜ் பாபு மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார்.

ஷனிபா பாபு அமீரகத்தில் வளர்ந்தவர் ஆவார். நேற்று முன்தினம் அவரது தாயார் துபாயில் இருந்து புஜேராவுக்கு மகளை பார்க்க சென்றுள்ளார். அப்போது காலை 9 மணியளவில் தனது கணவர், குழந்தைகள், தாயார் என அனைவரும் வீட்டில் இருந்த நேரத்தில் 19-வது மாடி பால்கனியில் இருந்து கீழே விழுந்தார். இதன் காரணமாக தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த மருத்துவ குழுவினரும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புஜேரா போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான ஷனிபா பாபு கடைசியாக டிக் டாக் செயலியில் 'என்னை காதலிக்காதே', 'நான் உன் இதயத்தை உடைப்பேன்' என ரீல்ஸ் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்