பிரேசிலை தாக்கிய புயல்: கனமழை, வெள்ளத்தில் சிக்கி 21 பேர் பலி

பிரேசிலில் புயல் தாக்கிய நிலையில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Update: 2023-09-06 00:08 GMT

பிரேசிலா,

பிரேசில் நாட்டை புயல் தாக்கியது. புயலால் அந்நாட்டின் ரியோ கிராண்டே உ சுல் மாகாணம் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது.

புயாலுடன் கனமழையும் பெய்தது. கனமழை காரணமாக ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து நகரின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடரும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரேசிலை தாக்கிய புயல், கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 21 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்