இத்தாலியில் தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் பிரதமர் மீது தாக்குதல்

இத்தாலியில் தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் பிரதமர் தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-05-06 17:06 GMT

இத்தாலியின் டஸ்கனி மாகாணத்துக்கு முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சி தலைவருமான கியூசெப் கோன்டே தேர்தல் பிரசாரம் செய்வதற்காக சென்றார். அவர் அங்குள்ள மாசா என்ற பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது அவரது ஆதரவாளர்கள் பலர் அவரை வரவேற்றனர். அப்போது அதில் ஒருவர் கை குலுக்குவது போல நடித்து அவரது கன்னத்தில் பளாரென அறைந்தார். உடனடியாக அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் கியூசெப் கொன்டே பிரதமராக இருந்த காலத்தில் கொரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததால் அவரை தாக்கியதாக அந்த நபர் தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் பிரதமர் தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு இத்தாலியின் தற்போதைய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்