உஸ்பெகிஸ்தான் செல்லும் பிரதமர் மோடியை வரவேற்க அவரது உருவம் பொறித்த கம்பளம் பரிசளிப்பு

பிரதமர் மோடிக்கு இந்தியா கிளப் தாஷ்கண்ட் என்ற அமைப்பு சார்பில் அவரது உருவம் பொறித்த உஸ்பெகிஸ்தான் கம்பளம் பரிசளிக்கப்பட்டுள்ளது.;

Update:2022-09-15 11:49 IST

சமர்கண்ட்,

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உள்பட 14 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்தநிலையில், உஸ்பெகிஸ்தான் செல்லும் பிரதமர் மோடிக்கு இந்தியா கிளப் தாஷ்கண்ட் என்ற அமைப்பு சார்பில் அவரது உருவம் பொறித்த உஸ்பெகிஸ்தான் கம்பளம் ஒன்று பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. இதனை உஸ்பெகிஸ்தானுக்கான இந்திய தூதர் வழியாக பிரதமர் மோடிக்கு அனுப்பி உள்ளனர்.

உஸ்பெகிஸ்தான் நாட்டில் கைகளினால் செய்யப்படும் கம்பளங்கள் மிகவும் பிரபலமானவை ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்