சிரியா மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்: 9 பேர் பலி
அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் இடத்தில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.;
கோப்புப்படம்
வாஷிங்டன்,
மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஈரான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.
அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் இடத்தில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு அமெரிக்காவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் சிரியாவில் உள்ள ஈரானுடன் தொடர்புடைய ஆயுதக் கிடங்கு ஒன்றில் இரண்டு அமெரிக்க எப்-15 போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் 9 பேர் உயிரிழந்ததாக அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லாய்டு ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.