ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையராக ஆஸ்திரியாவை சேர்ந்த வோல்கர் டர்க் நியமனம்!

ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையராக வோல்கர் டர்க் நியமிக்கப்பட்டார்.

Update: 2022-09-09 08:10 GMT

நியூயார்க்,

ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையராக வோல்கர் டர்க் நியமிக்கப்பட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையராக ஆஸ்திரியாவை சேர்ந்த வோல்கர் டர்க்கை நியமித்தார்.

வோல்கர் டர்க் தற்போது ஐ.நா நிர்வாக அலுவலகத்தில் துணைப் பொதுச் செயலாளராக உலகளாவிய கொள்கைப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார். அவரது பணிக் காலத்தில், அவர் பல முக்கிய பதவிகளை வகித்தவர்.

இது குறித்து வோல்கர் டர்க் கூறுகையில், "நான் ஒரு ஆழமான பொறுப்புணர்வை உணர்கிறேன், மேலும் எல்ல இடங்களிலும், அனைவருக்கும் மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனத்தின் வாக்குறுதிகளை முன்னெடுப்பதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் வழங்குவேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்