ஆன்மிகம்
வாரம் ஒரு அதிசயம்

இந்தக் கோவிலில் அருள்பாலிக்கும் மூலவரின் திருநாமம் ‘பசுபதிநாதர்’ என்பதாகும்.
நேபாளத் தலைநகர் காட்மண்டில், பாக்மதி நதிக் கரையில் அமைந்திருக்கிறது பசுபதிநாதர் திருக்கோவில். இந்தக் கோவிலில் அருள்பாலிக்கும் மூலவரின் திருநாமம் ‘பசுபதிநாதர்’ என்பதாகும். மூலவர் வீற்றிருக்கும் கருவறையின் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. கருவறை கதவு வெள்ளியால் ஆனது. மூலவர் கருவறைக்கு எதிரே உள்ள நந்தி சிலை பஞ்சலோகத்தால் ஆனது. இந்த ஆலயத்தின் மேலும் அதிசயிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இங்குள்ள மூலவரான பசுபதிநாதர், ஆறு முகங்களுடன் காட்சியளிக்கிறார்.