மலை மாதேஸ்வரர் கோவில்

மாதேஸ்வரன் மலை மீது மலை மாதேஸ்வரர் கோவில் இருக்கிறது.

Update: 2018-04-17 07:44 GMT
‘எம்.எம். ஹில்ஸ்’ எனப்படும் மாதேஸ்வரன் மலை, சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகாவில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. இந்த மலை மீது மலை மாதேஸ்வரர் கோவில் இருக்கிறது. இங்கு கர்நாடகம், தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்தக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் மலை மாதேஸ்வரா சாமி, சிவனின் அவதாரம் என்று நம்பப்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மலை மாதேஸ்வரா சாமி, புலி வாகனத்தில் வந்து தங்களை பாதுகாக்கிறார் என்பது அந்த பகுதி மக்கள் மற்றும் துறவிகளின் நம்பிக்கையாக உள்ளது. இங்கு சுற்றுலா செல்பவர்கள் சாமி தரிசனம் செய்வது மட்டுமின்றி, அடர்ந்த வனப் பகுதியையும் பார்த்து ரசிக்கலாம். மேலும் மலை ஏறுவதற்கான வசதியும் உள்ளது. இந்த மாதேஸ்வரா மலை பெங்களூருவில் இருந்து 210 கிலோமீட்டர் தொலைவிலும், மைசூருவில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது. 

மேலும் செய்திகள்