சபரிமலையில் அய்யப்பனுக்கு கற்பூர ஆழி நடத்திய காவலர்கள்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் களைகட்டி வருகின்றன.;

Update:2025-12-25 18:17 IST

சபரிமலை,

நடப்பு மண்டல சீசனையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் தினமும் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்து வருகிறது. இந்த சீசனில் சபரிமலையில் இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்துள்ளனர். கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இருந்ததை விட கூடுதலாக 5 லட்சம் பேர் இந்த முறை சபரிமலைக்கு வந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மண்டல பூஜைக்கு தயாராகி வரும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் களைகட்டி வருகின்றன. நாளை மறுநாள் மண்டல பூஜை நடைபெற உள்ள நிலையில், சபரிமலை காவல்துறையினர் மேள, தாளங்களுடன் அய்யப்பனுக்கு கற்பூர ஆழி நடத்தினர். இந்த கற்பூர ஆழி என்பது அக்னியைக் கொண்டு அய்யப்பனை வழிபடும் முறையாகும். மாளிகைபுரத்து அம்மன் கோவில் வரை கற்பூர ஆழி கொண்டு செல்லப்பட்டு, 18-ம் படியின் கீழ் நிறைவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கேரள டி.ஜி.பி. சந்திரசேகர், ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித் வெங்கடேஷ் மற்றும் ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்