திருப்பதியில் சொர்க்க வாசல் தரிசனம்: டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே அனுமதி - தேவஸ்தானம் அறிவிப்பு

டிக்கெட்டுகள் இல்லாமல் வந்து பக்தர்கள் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.;

Update:2025-12-27 12:19 IST

திருப்பதி,

ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி 'வைகுண்ட ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது. இந்த வைகுண்ட ஏகாதசியில் பெருமாள் கோவில்களில் 'சொர்க்கவாசல்' எனப்படும் 'பரமபத வாசல்' திறக்கப்பட்டு அந்த வழியாக பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் சென்று தரிசனம் (வைகுண்ட துவார தரிசனம்) செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1-ந்தேதிகளில் சொர்க்க வாசல் தரிசனம் நடைபெறுகிறது. இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்க வாசல் தரிசனத்திற்கு டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே அனுமதி என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. டிக்கெட்டுகள் இல்லாமல் வந்து பக்தர்கள் ஏமாற வேண்டாம் என தேவஸ்தானம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்