இந்த வார விசேஷங்கள்

5-2-2019 முதல் 11-2-2019 வரை

Update: 2019-02-05 07:50 GMT
5-ந் தேதி (செவ்வாய்)

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆலயத்தில் சுவாமிக்கு காலை சூர்ணாபிஷேகம், இரவு வேணுகோபாலர் திருக்கோலமாய் காட்சியருளல்.

சூரியநயினார் கோவிலில் சிவபெருமான் புறப்பாடு.

திருநாங்கூரில் 11 கருட சேவை.

திருமயம் ஆண்டாள் பிரியாவிடை, எண்ணெய் காப்பு உற்சவம் ஆரம்பம்.

சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

மேல்நோக்கு நாள்.

6-ந் தேதி (புதன்)

வாசவி அக்னி பிரவேசம்.

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ரத உற்சவம்.

வைத்தீஸ்வரன் கோவில் செல்வ முத்துக் குமாரசாமி திருவீதி உலா.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.

திருமணம் ஆண்டாள் புறப்பாடு கண்டருளல்.

மேல்நோக்கு நாள்.

7-ந் தேதி (வியாழன்)

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தொட்டி திருமஞ்சனம், இரவு குதிரை வாகனத்தில் வீதி உலா.

திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் ராமருக்கு திருமஞ்சன சேவை.

மேல்நோக்கு நாள்.

8-ந் தேதி (வெள்ளி)

சதுர்த்தி விரதம்.

சங்கரன்கோவில் கோமதியம்மன் தெப்ப உற்சவம்.

களக்காடு சக்திவாகீஸ்வரர் ஆலயத்தில் தெப்ப உற்சவ விழா.

மிலட்டூர் விநாயகப்பெருமான் புறப்பாடு.

தோரெழுந்தூர் திருஞானசம்பந்தர் பவனி வருதல்.

கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.

திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.

கீழ்நோக்கு நாள்.

9-ந் தேதி (சனி)

திருநெல்வேலி சாலைகுமார சுவாமி ஆலயத்தில் வருசாபிஷேகம்.

வைத்தீஸ்வரன்கோவில் முத்துகுமார சுவாமி பவனி வருதல்.

திருமயம் ஆண்டாள் பவனி.

திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.

மேல்நோக்கு நாள்.

10-ந் தேதி (ஞாயிறு)

சஷ்டி விரதம்.

முகூர்த்த நாள்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி, பாவூர்சத்திரம் வென்னிமலை சுப்பிரமணிய சுவாமி, பெருவயல் முருகன் கோவில்களில் மாசி உற்சவம் ஆரம்பம்.

காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் மாசி மகம் உற்சவம் தொடக்கம்.

திருக்கோஷ்டியூர் சவுமிநாராயணப் பெருமாள், மதுரை இம்மையில் நன்மை தருவார், மதுரை கூடலழகர், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.

சமநோக்கு நாள்.

11-ந் தேதி (திங்கள்)

திருச்செந்தூர் முருகப்பெருமான் சங்க கேடய சப்பரத்திலும், அம்பாள் சிறிய சப்பரத்திலும் பவனி.

மதுரை கூடலழகர் காலை ஆண்டாள் திருக்கோலமாய் காட்சியருளல், மாலை அனுமன் வாகனத்தில் ராம அவதார காட்சி.

கும்பகோணம் சக்கரபாணி, திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் தலங்களில் உற்சவம் தொடக்கம்.

திருக்கோஷ்டியூர் சவுமிநாராயணப் பெருமாள் மரத் தோளுக்கினியானில் பவனி.

ஸ்ரீரங்கத்தில் கருட சேவை.

சமநோக்கு நாள்.

மேலும் செய்திகள்