சூலூர் அருகே பரபரப்பு : மாசாணியம்மன் சிலையை தேடி வந்து அமர்ந்த கிளி பக்தர்கள் பரவசம்

ஆடி மாதம் வெள் ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்த நிலையில் நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற்றது.

Update: 2021-07-30 20:31 GMT
கருமத்தம்பட்டி, 

கோவை மாவட்டம் சூலூர் அருகே இருகூரில் 100 ஆண்டு பழமை யான மாசாணியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதம் வெள் ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்த நிலையில் நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற்றது. மாசாணியம்மன் சிலைக்கு பூசாரி பூஜை செய்து கொண்டு இருந்தார். அப்போது அம்மன் சிலையின் மடியில் எங்கிருந்தோ பறந்து வந்த கிளி திடீரென்று வந்து அமர்ந்தது. இதை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர். பூசாரி பூஜைகள் செய்த போதும் அந்த கிளி அச்சம் இன்றி அம்மன் சிலையிலேயே தொடர்ந்து அமர்ந்து இருந்தது. இது குறித்த தகவல் அறிந்த உடன் அந்த பகுதி பக்தர்கள் கோவி லுக்கு விரைந்து வந்து அம்மனை தரிசனம் செய்தனர். அம்மன் சிலை மேல் கிளி வந்து அமர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்