கொசவபட்டியில் ஞானப்பிரகாசியார் ஆலய தேர் பவனி

அலங்கரிக்கப்பட்ட மின்தேரில் புனித ஞானப்பிரகாசியார் முக்கிய வீதிகளின் வழியே பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.;

Update:2025-06-29 12:51 IST

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள கொசவபட்டியில் புனித ஞானப்பிரகாசியர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 116-வது ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் தேர் பவனி நேற்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மின்தேரில் புனித ஞானப் பிரகாசியார் முக்கிய வீதிகளின் வழியே பவனி வந்தார். பின்னர் ஆலயத்தில் திருப்பலி நடந்தது. விழாவில் பங்குத்தந்தை அகஸ்டின் ஜேக்கப், உதவி பங்கு தந்தை ஜான், அருட் சகோதரிகள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்