தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-04-20 01:58 GMT

தஞ்சாவூர்,

மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். பல்வேறு சிறப்புகளைப் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 18 நாட்கள் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

அதன்படி இந்த ஆண்டு சித்திரை கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் தற்போது வெகு விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, 'ஓம் நமச்சிவாய' என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Full View


Tags:    

மேலும் செய்திகள்