பவுர்ணமியை முன்னிட்டு பருவதமலை உச்சிக்கு சென்று பக்தர்கள் தரிசனம்

வைகாசி பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் பருவதமலை உச்சிக்கு சென்று வழிபட்டனர்.

Update: 2024-05-25 07:33 GMT

 திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகா தென் மகாதேவமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பருவத மலையானது 4 ஆயிரத்து560 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இம்மலை மீது ஸ்ரீ பிரம்மராம்பிகை உடனுறை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது

இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வமாநிலங்களில் இருந்து பவுர்ணமி தோரும் பக்தர்கள் வந்து செல்கின்றனர் இந்நிலையில் வைகாசி பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பருவத மலைக்கு வருகை தந்தனர்.தொடர்ந்து இரண்டாவது நாளாக பக்தர்கள் மலை மீது ஏறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்