சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

திருவாரூர் மாவட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.;

Update:2023-09-13 00:16 IST

திருமக்கோட்டை;

திருவாரூர் மாவட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

பிரதோஷ வழிபாடு

திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு ஞானபுரீஸ்வரருக்கும் நந்திக்கும் பால், பன்னீர், சந்தன அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து ஒரே நேரத்தில் சிவனுக்கும் நந்திகேஸ்வரருக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

காசிவிசுவநாதர் கோவில்

நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் விசாலாட்சி, காசிவிசுவநாதர், பிரதோஷ நாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதைப்போல நவக்கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி குருபரிகார கோவிலில் வார பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கைலாசநாதர் கோவில்

வடுவூர் வடபாதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் மூலவர் மற்றும் வடிவழகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. பாமணி நாகநாதசாமி கோவிலில் மூலவர் நாகநாதருக்கு கவசம் அணிவித்து அலங்கரித்து இருந்தனர். தொடர்ந்து நந்தி பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தனர்.

தில்லைவிளாகம்

முத்துப்பேட்டை அடுத்து ஜாம்புவானோடை வடகாடு விசாலாட்சி விசுவநாதர் கோவில் பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனனம் செய்தனர். இதைப்போல கோவிலூர் பெரிய நாயகி மந்திரபுரீஸ்வரர் கோவிலிலும் நந்தி பகவானுக்கு விசேஷ பூஜை நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு இடும்பாவனம் மங்களநாயகி சற்குணநாதர் ேகாவிலிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்