தஞ்சை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி தஞ்சை பெருமாள் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.;

Update:2023-10-15 03:15 IST

தஞ்சாவூர்;

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி தஞ்சை பெருமாள் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


வரதராஜ பெருமாள்

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி தஞ்சை லாலிஹால் அருகில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை பெருமாள்- ஸ்ரீதேவி, பூதேவிருக்கு பால், மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் வடை மாலை சாற்றி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தஞ்சை நாலுகால் மண்டபம் மூலவர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதே போல நாலுகால் மண்டபம் அருகில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ரெங்கநாயகி சமேதராக பெருமாள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இத்தலம் தஞ்சையின் ஸ்ரீ ரங்கம் என்று அழைக்கப்படுகிது.

திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.கீழராஜ வீதி வரதராஜ பெருமாள், வடக்கு வீதி ராஜகோபால்சாமி, தெற்கு வீதி கலியுக பெருமாள் கோவில், கொண்டிராஜபாளையம் யோக நரசிம்மர் கோவில், மகர்நோம்புச்சாவடி பிரசன்ன வெங்கடேஷ பெருமாள் கோவில், வல்லம் நரசிம்ம பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்