அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது;

Update:2022-08-12 22:17 IST

சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் தெற்குவெளி தெருவில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. முன்னதாக, விரதம் இருந்த பக்தர்கள் ரயில்வே ரோடு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் முத்து மாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல சீர்காழி தென்பாதி மாரியம்மன் கோவில், புற்றடி மாரியம்மன் கோவில், சீர்காழி சட்டைநாதர் கோவில், திருப்புங்கூர் மாரியம்மன் கோவில், சட்டநாதபுரம் முத்து மாரியம்மன் கோவில், வள்ளுவக்குடி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் ஆடி கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன.குத்தாலம் அருகே அசிக்காடு புதுத்தெருவில் காளியம்மன், பச்சையம்மன், பதினெட்டாம்படி கருப்புசாமி கோவிலில் 15-ம் ஆண்டு பால்குட திருவிழா ஆடி கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று நடந்தது. முன்னதாக அசிக்காடு மேல குளக்கரையில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவையொட்டி கஞ்சி வார்த்தல் நடந்தது.




Tags:    

மேலும் செய்திகள்