கர்ப்பரட்சாம்பிகை கோவில் வைகாசி விசாக தேரோட்டம்
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவில் வைகாசி விசாக தேரோட்டம் நடந்தது.;
மெலட்டூர்;
பாபநாசம் அருகே உள்ள திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. முன்னதாக முல்லைவனநாதருக்கும்- கர்ப்பரட்சாம்பிகை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. 9-வது நாள் நிகழ்ச்சியாக கட்டுத்தேர் திருத்தேரோட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் ஆசைத்தம்பி மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து இருந்தனர்.