வடிவழகி அம்மன் கோவில் குடமுழுக்கு

நீடாமங்கலம் அருகே வடிவழகி அம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.;

Update:2022-06-17 23:17 IST

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் அருேக உள்ள அக்ரஹார பூவனூர் மேலத்தெருவில் புதிதாக எழுந்தருளியுள்ள வடிவழகி அம்மன் கோவில் குடமுழுக்கு நேற்று நடைபெற்றது. இதைமுன்னிட்டு விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், லெட்சுமி ஹோமம், தனபூஜை, யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று 2-ம் கால யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து விமான குடமுழுக்கு, மூலவர் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடிவழகி அம்மன், பரிவார தெய்வங்களான அய்யனார், சாம்பான், பெரியாச்சி அம்மன் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்