நவக்கிரகங்கள் இல்லாத சிவாலயங்கள்

அனைத்து சிவாலயங்களிலும் நவக்கிரக சன்னிதி இடம் பெற்றிருக்கும். நவக்கிரகங்கள் இல்லாத பிரசித்தி பெற்ற புராதன சிவாலயங்களும் பல இருக்கின்றன. பெரும்பாலும் எமன் வழிபட்ட சிவாலயங்களாக இருந்தால் அங்கு நவக்கிரகங்கள் இருக்க வாய்ப்பில்லை.;

Update:2022-07-21 16:09 IST

சென்னை அடுத்துள்ள திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் நவக்கிரகம் இல்லை. ஏனென்றால் அது எமன் வந்து வழிபட்ட தலம்.

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலிலும் நவக்கிரக சன்னிதி இல்லை. இங்கும் எமன் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சியப்பர் கோவிலில் எமதர்மனுக்கு முக்கியத்துவம் உண்டு. எனவே இங்கும் நவக்கிரகங்கள் இல்லை.

திருவாவடுதுறை ஆலயத்திலும் எமன் வழிபட்டு உள்ள காரணத்தால் நவக்கிரகங்கள் இடம்பெற வில்லை.

திருப்பைஞ்சீலி, வாழை மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட சிவ தலம். திருச்சிக்கு அருகில் உள்ள இந்த தலத்திலும் நவக்கிரகங்கள் கிடையாது.

திருக்கடையூரில் மானிடர்களின் உயிரைப் பறித்த எமனுக்கு சிவன் இங்கு மறுபடியும் உயிரை எடுக்கும் அதிகாரம் வழங்கியதாக ஐதீகம். இங்கும் நவக்கிரகங்கள் இல்லை.

திருவையாறுக்கு அருகே உள்ள திருமழப்பாடி திருத்தலத்திலும் நவக்கிரகம் இல்லை.

Tags:    

மேலும் செய்திகள்