வலம்புரி பாலச்சந்திர விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

வலம்புரி பாலச்சந்திர விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்;

Update:2023-05-05 01:31 IST

தஞ்சை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வலம்புரி பாலச்சந்திர விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் அக்னி நட்சத்திர தொடக்கத்தையொட்டி வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக வலம்புரி பாலச்சந்திர விநாயகருக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்