ஆஸ்திரேலிய ஊடகத்துக்கு அமிதாப் பச்சன் பதிலடி

இந்திய கேப்டன் விராட் கோலியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் ஒப்பிட்டு ஆஸ்திரேலிய பத்திரிகை தி டெய்லி டெலிகிராப் விமர்சனம் செய்தது.

Update: 2017-03-23 00:00 GMT
 ‘விராட் கோலி, விளையாட்டு உலகின் டிரம்ப் ஆகிறார். டிரம்ப் போன்று, தன் மீதான சர்ச்சைக்குரிய புகார்களை மறைக்க ஊடகங்களை குறை கூறுகிறார், கோலி’ என்று அந்த பத்திரிகை கூறியிருந்தது.

இதற்கு இந்தி பட உலகின் ‘சூப்பர் ஸ்டார்’ அமிதாப் பச்சன் பதிலடி கொடுத்துள்ளார். ‘ஆஸ்திரேலிய ஊடகம் விராட் கோலியை விளையாட்டின் டொனால்டு டிரம்ப் என்று வர்ணித்துள்ளது. விராட் கோலி ஒரு வெற்றியாளர் மற்றும் அதிபர் என்பதை ஒப்புக்கொண்டதற்காக ஆஸ்திரேலிய ஊடகத்திற்கு நன்றி’ என்று அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்