கிரிக்கெட்
பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் பந்து வீச்சுக்கு அனுமதி

பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் பந்து வீசவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
பாகிஸ்தான்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முகமது ஹபீஸ் பந்து வீச்சு விதிமுறைக்கு மாறாக இருப்பதாக 3-வது முறையாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முகமது ஹபீஸ் பந்து வீச தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் தனது பந்து வீச்சை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற மையத்தில் சோதனைக்கு உட்படுத்தினார். அதில் அவரது பந்து வீச்சு திருப்திகரமாக இருந்தது. இதனை அடுத்து தற்போது முகமது ஹபீஸ் மீண்டும் பந்து வீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.