கிரிக்கெட்
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு எதிரான டி20 போட்டி: விராட் கோலி கேப்டனாக அறிவிப்பு

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு எதிரான டி20 போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டு உள்ளார். #ViratKohli
பெங்களூரு,

இந்திய அணி, அயர்லாந்து நாட்டு அணியுடன் இரண்டு டி20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.  இது ஜூன் 27 மற்றும் 29ந் தேதி நடைபெறுகிறது.

இந்த போட்டியின் கேப்டனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டு உள்ளார்.  இதனை தேசிய தேர்வு குழு இன்று அறிவித்துள்ளது.

இதற்கான இந்திய அணி வீரர்கள் விவரம்:

விராட் கோலி (கேப்டன்), தவான், ரோகித், கே.எல். ராகுல், ரெய்னா, மணீஷ், எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், சஹல், குல்தீப், சுந்தர், புவனேஷ்வர், பும்ரா, ஹர்தீக், கவுல், உமேஷ் ஆகியோர் ஆவர்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளுக்கும் இதே இந்திய அணியே விளையாடும்.