கிரிக்கெட்
இங்கிலாந்தில் நடக்கும் முத்தரப்பு ஒரு நாள் போட்டிக்கு ஸ்ரேயாஸ் கேப்டனாக அறிவிப்பு

இங்கிலாந்தில் நடக்கும் முத்தரப்பு ஒரு நாள் போட்டிக்கு ஸ்ரேயாஸ் இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டு உள்ளார். #IndianTeam
பெங்களூரு,இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் செய்து ஜூன் 22ந்தேதியில் இருந்து முத்தரப்பு ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகிறது.  இதில் இந்தியா ஏ அணியானது, இங்கிலாந்து லயன்ஸ் ஏ அணி மற்றும் மேற்கு இந்திய தீவுகள் ஏ அணி ஆகியவற்றுடன் விளையாடுகிறது.  இதற்கான இந்திய ஏ அணி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்திய ஏ அணி வீரர்கள் விவரம்:ஸ்ரேயாஸ் (கேப்டன்), பிருத்விஷா, மயாங் அகர்வால், சுப்மேன் கில், விஹாரி, சாம்சன், தீபக், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), விஜய், கிருஷ்ணப்பா கவுதம், அக்சர் பட்டேல், கிருணல், பிரஷீத், தீபக் சஹர், அகமது, ஷர்துல் ஆகியோர் விளையாடுகின்றனர்.