கிரிக்கெட்
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் 268 ரன்கள் சேர்ப்பு

பாகிஸ்தான்– அயர்லாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டப்ளின் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.
டப்ளின், பாகிஸ்தான்– அயர்லாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டப்ளின் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. மழை காரணமாக முதல் நாளில் ஒரு பந்து கூட வீசப்படவில்லை.இந்த நிலையில் 2–வது நாளான நேற்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி ஆட்ட நேர முடிவில் 76 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் சேர்த்துள்ளது. ஆசாத் ‌ஷபிக் (62 ரன்), ‌ஷதப் கான் (52 ரன், நாட்–அவுட்), பஹீம் அஷ்ரப் (61 ரன், நாட்–அவுட்) ஆகியோர் அரைசதம் அடித்தனர். 3–வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.