கிரிக்கெட்
டி.என்.பி.எல். கிரிக்கெட்: காஞ்சி வீரன்ஸ் முதல் வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி, காஞ்சி வீரன்ஸ் முதல் வெற்றியை பதிவு செய்தது.
நெல்லை,

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் காஞ்சி வீரன்ஸ்- கோவை கிங்ஸ் அணிகள் சந்தித்தன. முதலில் பேட் செய்த காஞ்சி அணி 8 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பாபா அபராஜித் 41 ரன்கள் (32 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து களத்தில் இருந்தார். பின்னர் களம் கண்ட கோவை பேட்ஸ்மேன்களை, காஞ்சி பவுலர்கள் நிமிர விடாமல் அடக்கினர். எளிய இலக்கை கூட எட்ட முடியாமல் தத்தளித்த கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 102 ரன்களே எடுத்தது. இதன் மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி அணி வெற்றி பெற்றது. அவுசிக் சீனிவாஸ் 3 விக்கெட்டுகளும், திவாகர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

5-வது ஆட்டத்தில் ஆடிய காஞ்சி அணிக்கு இது தான் முதல் வெற்றியாகும். முந்தைய 4 ஆட்டங்களிலும் தோற்று இருந்தது. கோவை கிங்சுக்கு இது 3-வது தோல்வியாகும்.