தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் இலங்கை அணி வெற்றி

இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கண்டியில் நேற்று முன்தினம் நடந்தது.

Update: 2018-08-09 22:00 GMT
கண்டி,

மழையால் 39 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷனகா 65 ரன்கள் சேர்த்தார். பின்னர் தென்ஆப்பிரிக்க அணி ஆடிய போது மழை மீண்டும் குறுக்கிட்டதால், 21 ஓவர்களில் 191 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அதை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி 21 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன்னே எடுத்தது. கடைசி ஓவரில் தென்ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய இலக்கை வேகப்பந்து வீச்சாளர் லக்மல் 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்ததுடன், அந்த ஓவரில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதனால் இலங்கை அணி 3 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 11 ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக சந்தித்த தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் 12-ந் தேதி நடக்கிறது.

மேலும் செய்திகள்