கிரிக்கெட்
20 ஓவர் கிரிக்கெட்: கோஸ்வாமி ஓய்வு

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கொல்கத்தா, 

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதான கோஸ்வாமி இந்திய அணிக்காக 68 இருபது ஓவர் போட்டியில் ஆடி 56 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற சிறப்புக்குரிய மேற்கு வங்காளத்தை சேர்ந்த கோஸ்வாமி ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளார்.