வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்ப்பு

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

Update: 2018-10-16 23:00 GMT
புதுடெல்லி,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் தேர்வாகி இருந்தார். ஆனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டின் போது அறிமுக வீரராக இடம் பிடித்திருந்த ஷர்துல் தாகூர், வெறும் 10 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் வலது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் வெளியேறினார். அதன் பிறகு அவர் மேற்கொண்டு பந்து வீசவில்லை.

இந்த நிலையில் ஒரு நாள் போட்டி அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டு இருக்கிறார். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வாய்ப்பு பெறாத உமேஷ் யாதவ், டெஸ்ட் தொடரில் அசத்தியதால் ஒரு நாள் போட்டி அணிக்கு திரும்புகிறார்.

மேலும் செய்திகள்