பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது டெஸ்ட்: வலுவான நிலையில் தென்ஆப்பிரிக்கா

தென்ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 177 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. 2–வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 382 ரன்கள் குவித்து, 205 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையை எட்டியுள்ளது. கேப்டன் பிளிஸ்சிஸ் சதமும் (103 ரன்), பவுமா (75 ரன்), குயின்டான் டி காக் (55 ரன்) அரைசதமும் அடித்தனர். 3–வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

Update: 2019-01-04 21:00 GMT

கேப்டவுன்,

மேலும் செய்திகள்