பெண்கள் பந்து வீச்சில் கோஸ்வாமி முதலிடம்

பெண்கள் பந்து வீச்சில் இந்திய வீராங்கனை கோஸ்வாமி முதலிடம் பிடித்தார்.

Update: 2019-03-04 22:45 GMT

பெண்களுக்கான ஒரு நாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் இந்திய நட்சத்திர வீராங்கனை மந்தனா (797 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி (756 புள்ளி) 2-வது இடத்திலும், நியூசிலாந்தின் சாட்டர்த்வெய்ட் (755 புள்ளி) 3-வது இடத்திலும், இந்திய கேப்டன் மிதாலிராஜ் (713 புள்ளி) 4-வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய மூத்த வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி 2 இடங்கள் அதிகரித்து 730 புள்ளிகளுடன் மறுபடியும் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் ஜெஸ் ஜோனசென் (723 புள்ளி) 2-வது இடத்திலும், பாகிஸ்தானின் சனா மிர் 3-வது இடத்திலும் (718 புள்ளி) உள்ளனர்.


மேலும் செய்திகள்