டி20 உலகக்கோப்பை; இந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - யுவராஜ் சிங் கணிப்பு

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது.

Update: 2024-04-29 17:14 GMT

கோப்புப்படம் 

மும்பை,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்தப் தொடரில் பங்கேற்க உள்ள 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்துள்ளது.

இதையடுத்து அனைத்து அணி நிர்வாகங்களும் டி20 உலகக்கோப்பைக்கான அணியை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் குறித்தும், ஒவ்வொரு அணியிலும் இடம் பெற வேண்டிய வீரர்கள் குறித்தும் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கிடம் டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் எவை என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து யுவராஜ் சிங் கூறியதாவது,

வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்