டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சி வாரியர்ஸ் 121 ரன்கள் சேர்ப்பு

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணி காஞ்சி வீரன்ஸ் அணிக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

Update: 2019-08-09 15:32 GMT
நெல்லை,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் மற்றும் 
காஞ்சி வீரன்ஸ்  அணிகளுக்கு இடையேயான 28-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து திருச்சி வாரியர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக நியான் ஷியாம் காங்கயன் மற்றும் கே.முகுந்த் ஆகியோர் களமிறங்கினர். இதில் நியான் ஷியாம் காங்கயன் 2 ரன்னிலும்,  அடுத்து களமிறங்கிய சத்ய நாராயணன் 2 ரன்னிலும்  ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கே.முகுந்த் மற்றும் ஆதித்யா கணேஷ், அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர். இதில் கே.முகுந்த் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதற்கு பின் மணிபாரதி 13 ரன்னிலும், பொறுப்பாக ஆடி ஓரளவு ரன் சேர்த்த ஆதித்யா கணேஷ் 43 ரன்களிலும், மாருதி ராகவ் 15 ரன்னிலும், சாய் கிஷோர் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் திருச்சி வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்துள்ளது. கடைசியில் சரவணகுமார் 1 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

காஞ்சி வீரன்ஸ் அணியில் சுதேஷ், ஆஷிக் ஸ்ரீனிவாஸ், சஞ்சய் யாதவ்,  பாபா அபராஜித் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காஞ்சி வீரன்ஸ் அணி களமிறங்க உள்ளது.

மேலும் செய்திகள்