இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 431 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 431 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Update: 2019-10-05 05:18 GMT
விசாகப்பட்டினம்,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்களுக்கு 502 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. மயங்க் அகர்வால் இரட்டை செஞ்சுரியும் (215 ரன்), ரோகித் சர்மா சதமும் (176 ரன்) விளாசினர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கியது தென்ஆப்பிரிக்கா. 

3-வது நாள் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்களுக்கு 385 ரன்கள் சேர்த்து இருந்தது. 4 -ஆம் நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில், 431 ரன்களை குவித்து தென் ஆப்பிரிக்க அணி ஆல் அவுட் ஆனது.  இந்திய அணியை விட தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 71 ரன்கள் பின் தங்கியுள்ளது.  

இந்திய அணியில் அதிகபட்சமாக அஷ்வின் 7 விக்கெட்களை கைப்பற்றினார். இதையடுத்து, இந்திய அணி 2-வது இன்னிங்சில் பேட் செய்து வருகிறது.

மேலும் செய்திகள்