டி20 உலகக்கோப்பை: இந்திய அணி தேர்வு குறித்து ரோகித் சர்மா-அகர்கர் ஆலோசனை

டி20 உலகக்கோப்பை போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.

Update: 2024-04-28 10:11 GMT

Image : AFP 

புதுடெல்லி,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்து கேப்டன் ரோகித் சர்மாவும், இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கரும் இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சதிப்புக்கு பிறகு வீரர்களின் தேர்வு இறுதி செய்யப்படும். நாளை அல்லது நாளை மறுநாள் இந்திய அணி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகியவை அந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன.இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ந் தேதி எதிர்கொள்கிறது. 9-ந் தேதி பாகிஸ்தானுடனும், 12-ந் தேதி அமெரிக்காவுடனும் , 15-ந் தேதி கனடாவுடனும் மோதுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்