போலியான தகவல்களை பரப்புவது கொரோனா பரவுவதை காட்டிலும் ஆபத்தான விஷயம் - விராட் கோலி வீடியோ

கொரோனா பரவுவதால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் போலி தகவல்களை பரப்ப வேண்டாம் என டிக்டாக் சார்பாக விராட் கோலி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Update: 2020-05-04 11:10 GMT
மும்பை,

கொரோனா வைரஸ் உயிர்ப்பலிகள் உலகையே அதிர வைத்து கொண்டிருக்கின்றன. ஏறத்தாழ 2 லட்சத்து 48 ஆயிரத்து 312 உயிர்கள், இதுவரை கொரோனா வைரசால் அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளன.  உலகில் கொரோனாவால் 35 லட்சத்து 67 ஆயிரத்து 001 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்து 57 ஆயிரத்து 009 பேர் மீண்டுள்ளனர்.

இந்தியா முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா காரணமாக 42,505 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1391 பேர் மொத்தமாக இதுவரை பலியாகி உள்ளனர்.

தற்போது பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் குறித்த சரியான புரிதல் இல்லாததால் பல்வேறு போலி செய்திகளும், தவறான தகவல்களும் தொடர்ந்து மக்களிடையே பரப்பப்பட்டு வருகின்றன. முக்கியமாக போலி செய்திகள் பரவுவதில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதுகுறித்து டிக்டாக் சமூக செயலி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை ஆயுஷ்மான் குரானா தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். டிக்டாக் சமூக செயலி விழிப்புணர்வு வீடியோவில் இந்திய கேப்டன் விராட் கோலியுடன், இந்தி நடிகர்கள் ஆயுஷ்மான் குரானா, சாரா அலி கான், க்ரித்தி சனோன் ஆகியோர் நடித்து வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் போலியான தகவல்களை பரப்புவது கொரோனா பரவுவதை காட்டிலும் ஆபத்தான விஷயம் என கூறியுள்ள அவர்கள் கொரோனா குறித்த போலி வீடியோக்கள் மற்றும் செய்திகளை ஃபார்வேர்டு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த தகவலை விராட் கோலியும் பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்