20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி அளித்தது வெஸ்ட்இண்டீஸ்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

Update: 2021-07-10 23:08 GMT
செயின்ட் லூசியா,

இவ்விரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 145 ரன்கள் சேர்த்தது. தனது முதலாவது அரைசதத்தை எட்டிய ஆந்த்ரே ரஸ்செல் 51 ரன் (28 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், மிட்செல் மார்ஷ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அடுத்த 10 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 41 ரன்களே தேவைப்பட்டது. இந்த சூழலில் அந்த அணி கடைசி 19 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்து 16 ஓவர்களில் 127 ரன்னில் சுருண்டது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணி 18 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து வெற்றியை ருசித்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 51 ரன்கள் எடுத்தார். வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஒபிட் மெக்காய் 4 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர்கள் ஹைடன் வால்ஷ் 3 விக்கெட்டும், பாபியன் ஆலென் 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

மேலும் செய்திகள்