இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட்: 7 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், 7 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

Update: 2021-08-01 22:14 GMT
கயானா, 

பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கயானாவில் நேற்று முன்தினம் நடந்தது. 

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட்டுக்கு 157 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 51 ரன்களும், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 46 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹோல்டர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

அடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 150 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் நிகோலஸ் பூரன் 33 பந்துகளில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 62 ரன்கள் விளாசியும் பலன் இல்லை. பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முகமது ஹபீஸ் 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 6 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை பெற்றார். முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்